பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H Hry H 235 புலமை இயங்காட்டல் தாம் புனையும் பாடல்களில் சிலேடை நயம், சொல் வாட்சிச் சிறப்பு முதலியன துலங்கும் வண்ணம் பார்த்துக் கொள்வதில் கவியரசு முடியரசனார் அவர்கள் முன் |கின்றார் என்பதனைப் பின்வரும் பாடல்கள் கொண்டு 1. தளியலாம். மகிபாலன் பட்டியினை வருணிக்கும் கவிஞர் கூற்றை முதற்கண் காண்போம். குளங்களில் நிறையும் நீர்தான் குறையினும் ஆங்கு வாழ்வோர் உளங்களில் நிறையும் ஈரம்தான் உருகுதல் என்றுங் காணார் வளங்கனிற் சுருங்கு மேனும் வழங்கலிற் சுருங்காக் கையர் களங்களிற் பதர்க ளுண்டு - காளையர் மணிகள் போல்வார் (1:11) நிழல்களே சாயும் அன்றி நிலையினிற் சாயா நெஞ்சர் கழனியில் வரம்பு செய்வர் கற்பதில் வரம்பு செய்யார் உழவினிற் களைகள் தோன்றும் உறவினிற் சுளைகள் காணார் அழல்களே சுடுவ தன்றி அவர்மொழி சுடுவ தில்லை (1:12) உழுகலங் குழிகள் செய்யும் ஒருவர்மற் றொருவர்க் காகக் குழியகழ் வினைகள் செய்யார் கூடியே வாழ்ந்து நிற்பர்