பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 இலக்கிய ஏந்தல்கள் மணக்கட்டும் அறிவுமணம் மலரட்டும் கலைமலர்கள் எனவிழைந்து செல்வ நீரை அணைக்கட்டுப் போடாமல் திறந்துவிடும் அழகுளத்தைப் பெருமனத்தை வியவார் யாரே? (3: 4) கண்ணெதிரே காட்சிகளைக் கொண்டு வரும் பாடற்றிறன் மிகச் சிறந்த கவிஞர்கள் தம் பாடல்களில் காட்சி களை வருணிக்கும் பொழுது, அக்காட்சிகளையே மனக்கண் முன் கொண்டு வந்து காட்டும் அரிய திறல் வாய்க்கப் பெற்றவராயிருப்பது உண்டு; அவ்வகையில் முடியரசனாரும் சில காட்சிகளை வருணிக்கு முகதிதான் அக்காட்சிகளையே கவினுற நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடும் ஆற்றல் கெற்றவராயிருத்தல் கண்கூடு. பண்டிதமணி அழகான தோற்றப் பொலிவும் அதே நேரத்தில் உடம்பின் ஒரே குறையாகக் காற்குறையும் பெற்றவர். மேடையில் சொற்பொழிவாற்றும் பொழுது அவர்தம் பருமையும் பொன்னிறமும் வாய்ந்த உடல் துலக்க முறுவதும், புன்னகை முகத்தினராய் அவர் பொலிவுறும் மாட்சியும், இன்சொல்லினராய் எவரையும் வயப்படுத்தும் அவர் பேச்சும், கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர வல்லதாகும். இதை ஒவியம் தீட்டிக் காட்டுமாப் போலக் கவிஞர் புனைந்திருக்கும் பாடல்கள் வருமாறு: சிரிப்பிருக்கும் அவர்வாயில், பேசும்காலை சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்முகத்தில் விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியிரண்டில் விரிநெற்றி பொலிவுபெற கீறிருக்கும்;