பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 இலக்கிய ஏந்தல்கள் யள்ளும் நீரிமையுடைத்தாகும். எடுத்துக்காட்டாக இரண்டு பாடல்களை இவண் காணலாம். வான்கலந்த மாணிக்க வாச கர்தாம் வாய்மலர்ந்து பொழிந்ததிரு வாசகத்தைத் தாங்கலந்து பாடுங்காற் செங்க ரும்பின் செழுஞ்சாறு வடித்தெடுத்துக் குறிஞ்சி தந்த தேன்கலந்து பால்கலந்து முற்றி கின்ற தீங்கனியின் சுவைகலந்து பிறந்து வந்த ஊன்கலந்தும் உயிர்கலந்தும் பருகுங் காலை உவட்டாமல் இனிப்பதுபோல் இன்பங் “ಜೆಲ್ಟ್ 12)

12

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் குளிர்மரங்கள் சூழுமகி பாலன்பட்டி மேடையிலும் ஓடையிலும் மற்று முள்ள வீதியிலும் தமையொத்த சிறுவரோடும் ஆடையிலே இவருளத்தைக் கவர்ந்து கொண்ட அரியதமிழ் மொழிதந்த நீதிநூலின் பாடலினாற் பெறுமின்பம் தழைத்தெ ழுந்து படர்ந்துவர மெய்யுணர்வாய் மிளிரப் பெற்றார் (5:13) பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய ம்ாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே (புறநானூறு 2.18) என்பது சங்கப்பாட்டு. எங்கெங்கோ பொன்னும் மணியும் முத்தும் கிடைப்பினும் உயர்ந்த அணிகலன் ஒன்று