பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 25 தொடர்ந்து நிலவக் காண்கிறோம். பாரதியாருக்குப் பின் சீரிய செல்வாக்கு பாரதிதாசனாரின் பாக்களுக்கே உண்டு. பிரமதேவன் கலையைத் தொழிலாளரே நடத்து கின்றனர் என்று பாரதியார் தெளிந்து பாடினார். பாரதிதாசனார், காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அங்கே காணத் தகுந்தது வறுமையாம் பூணத் தகுந்தது பொறுமையாம் என்று முழங்கினார்; மனிதநேயக் கருத்துக்களை வழங்கி னார். கடவுள் நம்பிக்கையும் சமயங்களும் தொழில் உலகந் தழைக்கச் செய்து புத்துலகம் படைக்க உதவுந் தொழிலாளர்க்கும், உழைப்பாளர்க்கும் உரிய பலன், உரிமை ஆகியவற்றைத் தருவதில்லை, எனக் கருதினார்; ஆகவே, கடவுளென்ற கட்டறுத்துத் தொழிலாளரை யேவுவோம் என்று பாடினார். பா ர தி த | ச னா ரு க் கு ப் பின் மூத்தவர்களில் கம்பதாசனும், தற்போது வாழுங் கவிஞரில் சாலை இளந்திரையன் அவர்களும் மானுடம் பாடிய புலவர்களாகப் புகழெய்தியுள்ளனர். சாலை இளந்திரையன் பூத்தது மானுடம் என்றே தனியொரு நூலைத் தந்துள்ளார். வீறுகள் ஆயிரம்" எனும் நூலில், உலகத் தோற்றம்’ என்ற கவிதையில் புதுமனப்பான்மையை, சமுதாய மாறுதல் விழையும் சோசலிசத்தை வரவேற்பதும் அறிமுகமாக்கலுமாகப் பாடுங்கருத்து, அமைந்துள்ளது.