பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 இலக்கிய ஏந்தல்கள் டாக்டர் வி சுப. மாணிக்கனார் அவர்கள் பண்டித மணியின் மிக நெருங்கிய மாணாக்கராய் ாைய்த்தமை யினைக் கிளத்தியுள்ள நயம் காண்க. நூலின் இறுதியிலும் ஒர் அழகிய உவமையை வைத்தே கவிஞர் காப்பியத்தை முடிக்கின்றார். உயர்பெரும் நோக்கங் கொண்ட ஒப்பிலாக் கல்வி தன்னை மயர்வுற உடலை யோம்பும் வாழ்க்கைக்கே வழியாக் கொண்டால் வயல்தனில் வரகுக் காக வளம்பெரும் பொன்னாற் செய்த உயரிய கொழுவைப் பூட்டி உழுவதற் கொப்பா மென்பார் ( 17:16) மொழிப்பற்று பண்டிதமணி தமிழுக்குத் தொண்டு செய்தவர்; தமிழார்வம் தழைக்கப் பெற்றவர். தம் வாழ்நாளில் தாய் மொழிக்காகவும், தமிழிசைக்காகவும் நன்கு உழைத்தவர். இதனை மொழிப்பற்று துலங்கும் வண்ணம் முடியரசனார்

    • t

புலப்படுத்தியுள்ளார். இருமொழி நூல்கள் தேடி எப்பொருட் டாகக் கற்றார்? பொருள்வரும் புகழும் வந்து பொலிந்திடும் என்றா கற்றார்? ஒருசிறி தேனும் அவ்வா றுளத்தினிற் கருதவில்லை; இருள்படர் வாழ்வில் இன்பம் எய்துதல் குறித்தே கற்றார் (2:37)