ச, பு 255 தம்மை மறந்து உணர்ச்சி மீதுாரப் பெற்றவராய் விளங்கும் நிலையினை விளங்கக் காணலாம். சுருங்கச் சொன்னால், இக்காப்பிய நாயகராம் அண்டிதமணியார் முதுபெரும் புலவர் கதிரேசனாரின் சண்புகள் எல்லாம் பாங்கான முறையில் கவியரசரால் புனையப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாகப் புலமை நயம் பொருந்தியவராயும், இலக்கியச் சுவையினை ()ணிமையுற மாந்துவராயும் பொதுநலம் பேணும் கொண்டராயும், இசைத்தமிழ் ஏற்றததிற்கென உழைத்த வருதலாகவும், சன்மார்க்க சபை கண்ட சான்றோராகவும், திருமுறை நெறி நின்ற துரயோராகவும், செட்டி நாட்டின் பிறப்பிற்குரிய பண்புகளின் பெட்டகமாகவும் வாழ்ந்து அண்மையில் நூற்றாண்டு விழாப் பெற்றுச் சிறந்தவரான அமரர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் உளறுைகோல் காப்பியம், சிறு காப்பிய உலகிற் சீரிய இடததைப் பெறும் சிறப்பிற்குரியதாகும்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/255
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை