பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 இலக்கிய ஏந்தல்கள் புதுவையில் மகாகவி பாரதியாருடனும் மகான் அரவிந்தருடனும் நெருங்கிப் பழகினர். இந்திய விடுதலை குறித்து இம்மூவரும் சிந்தித்தனர். இவர்களுடைய செயல் திட்டங்கள் ஆங்கில அரசாங்கத்தைக் கதி கலக்கின. சுதேசிகள் புதுவையில் இருப்பதால் புதுவை நகரையே விலை கொடுத்து வாங்கி விடலாமா என்றும் ஒருமுறை ஆங்கிலேயே அரசு அவாவியதாம். வீட்டாரும் பசுபதி ஐயரும், வ.வே.சு. ஐயர் ஆங்கில எல்லைக்கு வந்து அமைதி யாகக் குடும்ப வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பெரிதும் விரும்பியும்கூட ஐ ய ர் ம ன ம் அதற்கு ஒ ரு போதும் ஒருப்படவில்லை. தம் மூத்த மகள் பட்டு இடை யில் இறந்து போயிற்று. வ.வே. சு. ஐயர் புதுவையில் இளைஞர்களுக்குப் படைக்கலப் பயிற்சி தந்தார். வாஞ்சி'க்கு வ வே சு. ஐயர் துப்பாக்கி சுடும் பயிற்சி தந்தார். 6. .1911 முதல் மூன்று திங்கள் ஐயரிடம் பயிற்சி பெற்ற வாஞ்சிநாதன் 17.6.1911 இல் மணியாச்சி ஜங்ஷனில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா முதலியோரைத் தண்டித்த கலெக்டர் ஆஷ் துரையை ரயிலில் சுட்டுக்கொன்றுவிட்டு உடனே ஒடி ரயில் நிலையத்திலிருந்த கழிப்பறைக்குச் சென்று துப்பாக்கி கொண்டு தன் வாயில் கட்டுக்கொண்டு மடிந்து போனான் இவ்வாறு தேசபக்தக் கனல்களின் பிறப்பிடமாக வ.வே.சு. ஐயர் அமைந்தார். இதனால் ஐயருக்குத் தொல்லைகள் மிகுந்தன. ஒரு முறை ஒற்றற் பிடியிலிருந்து தப்ப பிள்ளையார் கோயிலிலுள் சென்று பிள்ளையார் சிலையின் பின்புறம் அமர்ந்து இரவெல்லாம் அங்கிருந்து காலையில் தப்பினார். பிறிதொரு முறை பாடைப் பிணமாகவும் ஐயர் மாறி ஒற்றர் கண்களில் மண்ணைத் தூவித் தப்பினார்.