பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. 275 சது கல் சமயத்தில் காலிகளின் கொடுமையிலிருந்து தம் irத்தால் உயிர் தப்பினார்; மனைவி மக்களையும் அப்பாற்றினார். இத்தகைய வாழ்க்கைப் போராட்டங் அகைெடயிலும் அன்னைத் தமிழை மறவாத நேருவினராம் வ.வே.சு. ஐயர் திருவள்ளுவரின் தெள்ளு தமிழ்க் குறளைத் தெளிந்த ஆங்கிலத்தில் சீரிய மொழி பெயர்ப்பு செய்து நூலாக வெளியிட்டார். ஐயராலும் நண்பர்களாலும் நிறுவப்பட்ட கம்ப நிலையம் கம்: சாமாயணம் பாலகாண்டத்தைச் சொற்பிரிவு செய்து வெளியிட்டது. மேலும் மங்கையர்க்கரசியின் காதல் கமல விஜயம், காங்கேயன், குளத்தங்கரை அரசமரம், எதிரொலியாள், அழேன் புக்கேன் முதலிய கதைகரும், சந்திர குப்த சக்கரவர்த்தியின் சரித்திரம், புக்கர் வாஷிங்டண் வரலாறு முதலிய நூல்களும் வெளியிடப் பட்டன. 1917ஆம் ஆண்டு வரை ஐயர் அவர்கள் இத்தகைய இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுத் தமிழன் னைக்குச் சிறந்த தொண்டாற்றினார். 1919இல் ஐரோப்பியப் போர் முடிந்தது. 1920-ல் அரசியல் குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப் பட்டது. முதலில் ஐயர் புண்ணியத் தலமான காசி சென்றார். பின்னர் தமிழ்நாடு வந்ததும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய தேசபக்தன் இதழுக்கு 31.7.1920ல் ஆசிரிய ரானார். அப்பத்திரிகையில் ஐயர் அவர்களின் புரட்சிப் பொறிகள் வெடித்தன. நாட்டுப் பற்று கொழுந்து விட்டெரிந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த ஐயருக்குக் கடலோரமாகவே நடந்து சென்று ஜார்ஜ் டவுனில் இருந்த பத்திரிகை அலுவலகத்தை அடையப் பிடிக்கும். அடர்ந்த தாடி, வகிடெடுத்த தலை