பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . .276 இலக்கிய ஏந்தல்க முடி, தூய வெண்ணிறக் கதராடை, பூப்போட்ட , மேலாடை, தோளில் தொங்கும் நீண்ட பை, காது மிதியடி, நெற்றியில் வெண்மை வீறுடன் துலங்கும் திரு. நடுவிலே சந்தனப் பிறை, அதன் நடுவே குங்கும பொட்டு இவைகளே பெருவாழ்வு வாழ்ந்த ஐயரவர்களின் அடையாளச் சின்னங்கள். இவ்வாறு ஒன்பது திங்கள் வரை தேசபக்தவ ஆசிரியராக இருந்த ஐயரவர்களை அவர் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக ஆங்கில அரசு தண்டனை தந்து பெல்லாரிச் சிறையில் தள்ளியது. அங்குப் பிறந்ததே “Kamba Ramayanam-A study” என்னும் ஆங்கிலத் திறனாய்வு நூலாகும், காந்தியடிகள் கட்டளையை ஏற்றுத் தாமிரபருlை யாற்றின் தெற்கே மூன்று கல் தொலைவில் சேரமாதேவி யில் ஒரு குருகுலம் அமைக்கப்பட்டது. பால பாரதி' திங்கள் இதழ் இங்கிருந்து வெளிவந்தது. குரு கோவிந்த சிங்கன் வரலாறு வெளியிடப் பெற்றது. ஐயர் அவர்கள் குருகுலத்தில் அயராது உழைத்தார். திரிசிரபுத்தில் இருந்த குடும்பத்திற்குத் திங்கள் தோறும் இருபத்தைந்து ரூபாய் அனுப்பினார். மகள் சுபத்திராவையும் மகன் கிருஷ்ணமூர்த்தியையும் ஆசிரமத்திற் கல்வி பயிலச் செய்தார். குருகுலம் இந்தியக் கல்வி முறையிலும் பண்பாட்டின் சூழலிலும் இனிதே வளர்ந்து வந்தது. குருகுல மாணவர்களை அழைத்துக் கொண்டு வ.வே.சு. ஐயரவர்கள் 3.2.1925ல் பாபநாசம் நீர் வீழ்ச்சியைக் காணச் சுற்றுலா சென்றிருந்தார். கல்யாண அருவியில் மகள் சுபத்திரா கால் தடுக்கி விழ ஆக்