H, Lurr. 385, வைகறைத் துயிலெழுந்து, காலைக்கடனை ஒழுங்காக முடித்து, தன் புனலாடி, நறுங்காற்றில் மூழ்கி, ஞாயிற்றொளியிற் படிந்து, இயற்கை உணவு கொண்டு புறத்தை அழகு செய்தும், அழுக்காறு, வெகுளி, அவா முதலிய தீ நீர்மைகளைக் களைந்து, அன்பு அருள் அறம் முதலிய நன்னிர்மைகளை மணந்து, அகத்தை அழகு செய்தும் வாழும் ஒருவன் மீது இயற்கை மணங் கமழுமென்பது ஒருதலை, இவ்வாழ்வு பெறாத சோம்பரின் புறத்திலும் அகத். திலும் அழுகல் நாற்றம் வீசும். இயற்கை வாழ்வு நடத்தும் ஒருவனது உள்ளம் புறமும் முருகெனும் அழகு கோயில் கொள்கிறது. அழகுள்ள இடத்தில் புலால் முடைக்கு இடமேது? அழகில் மணமிருத்தல் இயல்பு. இவ்வாறு முருகன் வழி இயற்கை வாழ்வில் தோய்ந்து இன்புறுதலைத் திரு.வி.க. வற்புறுத்தக் காணலாம். சமரச மனப்பான்மை கொண்ட திரு.வி.க. சமயத் துறையில் பொதுமையும் அறமும் விளங்க ஒரு புதுவழி கண்டவர் எனலாம். எச்சமயத்தையும் தாக்காது அதே நேரத்தில் அனைத்துச் சமயங்களையும் ஒப்பப் புகழும் அவர்தம் உரைத்திறம் கண்டு சாதிச் சழக்கும், சம்பிரதாயப் பிணக்கும், உன் தெய்வம் உயர்வு என் தெய்வம் உயர்வு' என உரைக்கும் வேறுபாடும் நீங்கிப் பொதுமையறங் கண்டு தெளியலாம்; புதுமையறங்கண்டு பொலியலாம். என்று. திரு.வி.க. கூறுகிறார். சத்தின் மார்க்கமாகிய இயற்கையோடியைந்துவாழ வேண்டுவது மக்கள் கடமை. அக்கடமை யினின்றும் வழுவி நிற்பது சன்மார்க்கம் பற் றி நடப்ப தாகாது. இந்நாளில் இயற்கை வாழ்வு செம்மை.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/285
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை