294 இலக்கிய ஏந்தல்கள் அவர்கள். இலக்கியச் செவ்வியினை எடுத்து நயம்படக் கிளத்திக் கூறுவதில் டாக்டர் அவர்கள் வல்லவர். சங்க இலக்கியத்தின் சாரத்தைப் பழகு தமிழில் பாங்குற எடுத்து மொழிளார்கள். சங்கப் பாடல்களுக்கு அவர்கள் விளக்கம் சொல்லும்பொழுது மாணவர்தம் மனத்திரை யில் சொல்லோவியமாக அவை விரியும். மனம் சங்க காலத்திற்கே பறந்து செல்லும். இலக்கியத்தைத் தாமும் சுவைத்து பிறரையும் சுவைக்கவைப்பார். சங்க இலக்கியப் பாடத்தினைப் பயிற்றுவிக்கும்பொழுது சி ன் ேன ர ம் தலைவியாகவும், தலைவனாகவும், தோ ழி யா கவும், பாங்கனாகவும், செவிலியாகவும் நின்று கவிதைநலங் கெழுமிய செஞ்சொல்லோவியங்களிலே திளைத்தெழுந்து அடிக்கரும்பு அயின்றன்ன முறையில் சுவை நலத்தை வெளிப்படுத்துகின்றபொழுது அதன் வயப்படாத நெஞ்ச மும் உண்டோ? அவர்கள் பேச்சில் செவ்விய சொற்களே அமையும்; கருத்தலைகள் மோதும்; மலையருவியெனக் கொட்டும். கருத் தோட்டத்தில் மாணவர் திக்குமுக்காட லாம்; கருத்தருவியில் நீந்தித் திளைக்கலாம். எப் பொருளையும் நுணுகிக் கண்டு ஆழ்ந்து சிந்தித்துத் தெளிந்த கருத்தினை வெளிப்படுத்தும் பேராற்றல் படைத்த கருத்துச் சிற்பி டாக்டர் அவர்கள் ஆவர், இதற்குக் குறுந்தொகையில் வ ரு ம் 'கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் இறையனார் பாட்டு. கரந்தைப்புலவர் கல்லூரியில் ஒரு முழுப்பேச்சாக ஒரு. நூலாக உருவெடுத்துள்ளதனையும், அகநானூற்றின் ஒருபாட்டு ஒவச் செய்தி எனும் அரியதோர் ஆராய்ச்சி நூலாகி அரசாங்கப் பரிசினைப் பெற்றிருப்பதனையும் காட்டலாம். . டாக்டர் அவர்களுக்குத் தமிழைத் தாழ்த்திப் பேசினால் பொறுக்காது. தமிழைத் தாழ்த்தித் தகாத
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/294
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை