பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இலக்கிய ஏந்தல்கள் ஆங்கிலப் புலவர்களில் சிலர் நகர்ப்புற வருணனை Liflóquiri; Glimt (Pope) arsonsisglóñang Poet of Township என்பர். ஆயினும் எப் புலவராயினும் சிற்றுார்சேரி முதலியவற்றின் இயற்கையழகுகளை விழைந்து பாடுவர். வாணிதாசர், சேரியில் தாம் கண்ட காட்சியை மெய்ம்மை (Realism) குன்றாது பாடிய திறம் பின்வருமாறு : சேரி அடுப்பினில் புளிக்காக் கூழே கொதித்திடும்; அழும் பிள்ளைக்குத் துடுப்பினைத் தூக்கிக் காட்டித் தேற்றுவாள்; இடதுகையின் மடிப்பினில் தலையை வைத்து வயிரொட்டித் தூங்கும் ஆளன் கெருப்பினில் உழைத்த தோளில் நெஞ்சமும் கண்ணும் சேர்ப்பாள்! பாரதிதாசனாரின் நேர் மாணவர்களில் ஒருவாரம் "தமிழ் ஒளி' இயற்கைப் பாவகையில் தனிப் பெருந்திறன் கொண்ட கவிஞராவர். அவர்தம் பட்டமரம்' எனுங் கவிதை இயற்கை வருணனையில் அவருக்குரிய கற்பனைத் திறன், சொல்லாட்சி முதலியனவற்றை நிறுவுவதாகும். முதலில் மனித மனம் போல் மரமும் பெருமூச்சும் விசனம் அடைகின்றது. பட்ட மரம் மொட்டைக் கிளையொடு கின்று தினம்பெரு மூச்சு விடும் மரமே!