320 இலக்கிய ஏந்தல்கள் காலப் பெண்கள் போல் குடும்ப வாழ்வில் விருப்பம் உள்ள வர்கள்; குடும்பத்தில் பற்றுக்கொண்டு, வெளிவேலையில் தாமரை இலைத் தண்ணிர் போல் பற்றில்லாமல் வாழ்கிற பெண்கள், இரண்டாவது வகை. 'திருமணமாகி விட்டதே. இனிமேல் விலக வழி இல்லை என்று குடும்பத்தில் வாழ்க்கை நடத்தி, வெளி உலகத்தில் ஆர்வம் மிகுந்த பெண்கள். குடும்பத்தில் அவர்கள் தாமரையிலை தண்ணிர்போல் பற்றில்லாமல் வாழ்வார்கள். ஆனால், தொழில் நிலையம், தோழமை உலகம், பொழுதுபோக்குநிலையம் (கிளப்) முதலியவற்றில் ஆர்வமாக இருப்பார்கள். கணவனைப் பெயரளவிற்குக் கொண்டிருப்பார்கள்; அல்லது சட்டத்தின் அளவுக்குச் சட்டை செய்வார்கள். மூன்றாவது வகை. சில பெண்கள் திருமணம் வாய்க்காமல் வாழ வேண்டி யிருக்கிறது. சிலர் திருமணம்கூடி வந்தாலும் வெறுத்துத் தள்ளி விடுகிறார்கள். இவர்களில் பலர் உலகப்பழிக்கு அஞ்சிக் கன்னிப் பெண்களாகவே ஒழுக்கத்தோடு வாழ்ந்து சாகிறார்கள். இது நான்காம் சாதி. இவ்வாறு ஒழுக்கத்தில் பற்று இல்லாத சாதி ஐந்தாம் சாதி”.* பொருந்திய குடும்பம் குமரவேல் மங்கை நல்லாள் வாழ்வு விழுமியதாய், பண்பட்டதாய் உள்ளது. குமரவேல் தம் குடும்ப வாழ்க்கை பைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடக் காணலாம் ; "குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக்கண்டு வாழவேண்டும் முள்ளுக்கு இடையே-முரட்டு இலைகளுக்கு இடையே
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/320
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை