பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

П.гат. 3.25 பெண்ணுக்கு ஆண் இதுபோன்றே பெண் தனக்கு ஏற்ற துணையைத் தேடும் பொழுது எண்ணும் எண்ணங்களையும், எண்ண வேண்டிய எண்ணங்களையும் அல்லி என்னும் புதினத்தில் அழகுறக் கூறியுள்ளார்: "இங்கிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்ல வேண்டு மானால், பயணத்திற்குத் துணை கிடைப்பார்களா என்று தேடுகிறோம். துணையாக வருகிறவர்கள் நல்லவர்களா என்று ஆராய்ந்து பார்க்கிறோம். ரயில் பயணத்திற்குச் செய்யும் அவ்வளவு முயற்சியும் வாழ்க்கைப் பயணத் திற்குச் செய்வதில்லை யாரோ சொல்வதைக் கேட்டு அப்பா என்னை ஒர் ஆ ணு ட ன் கூட்டித் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்ப மாட்டார். ஆனால் அவரே இன்று வாழ்க்கைப் பயணத்திற்குத் துணைகூட்டி அனுப்பத் துணிந்துவிட்டார். யாரோ சொல்வதைக் கேட்டுத்தான்." 'இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும், ஈ எறும்பாலும் முடியும். தேவையானது கிடைக்கும்போது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே வந்து மொய்க்கின்றன. அதுபோல், இன்பம் உள்ளபோது யார் வேண்டுமானாலும் வந்து மொய்த்துக் கொள்வார்கள் ஆகையால் இன்பத் திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத் தேடு. உறவானாலும் நட்பானாலும் காதலானாலும் இப்படித்தான் தேட வேண்டும்." இவ்வாறு குடும்பம் அமைய அடிப்படை வகுக்கும் திருமணத்தைப் பற்றி பேசுகின்றார். @.@r.ー2l