பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 இலக்கிய ஏந்தல்கள் கள் பெரிய குற்றமாகக் கருதுவதில்லை. இரண்டு பக்கம் எழுத வேண்டியதை இரண்டரை பக்கமாக எழுதினால் கோபித்துக்கொள்வதில்லை. ஒருநாள் இரண்டுநாள் படிக்காமலே வந்தாலும் நேரம் கழித்து வந்தாலும் மன்னித்து விடுகிறார்கள். இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக் கிறது பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய்வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்தது போல் இருக்கிறது" அதே புதினத்தில் பாக்கியம் அம்மையார் வாயிலாகப் பிறிதொரு வகைக் கணவரைப் பற்றிய சித்திரம் பின் வருமாறு குறிப்பிடப்படுகின்றது. 'உன் கணவர் கொள்கை உடையவர். ஒரு நெறியை நம்புகிறவர். சொல்கிறபடி நடக்கிறவர். ஆகையால் நீ அவரை நம்பலாம். உனக்கு ஒருவழி, அவருக்கொரு வழி என்று நடந்தால், அப்படிப்பட்ட ஆளை நம்பக்கூடாது. சில ஆண்கள் வீட்டிலே சிக்கனம் பிடிக்கச் சொல்லி வெளியே சீட்டு ஆடிக் காசைத் தொலைப்பார்கள். மனைவி மக்கள் வெறுஞ் சோறு உண்ணச்செய்து தாம் மட்டும் ஒட்டலில் சுவையாகத் தின்பார்கள். மனைவி மக்களை வீட்டில் ஏமாற்றிவிட்டுத் தாம்மட்டும் நாடகமும் சினிமாவும் விடாமல் பார்ப்பார்கள். அவர்களுக்கு ஒருநாளும் உண்மையான அன்பு ஏற்படாது. உயிரையே விடுவதுபோல் உருகி உருகிப் பேசினாலும் அவர்களை நம்ப முடியாது; நம்பக்கூடாது. உன் கணவர் அப்படிப்பட்டவரா மணிமேகலை! உனக்குப் பட்டு வேண்டா எனறு சொல்லிவிட்டு அவர் மட்டும் ஆடம்பரமாகத் திரிகிறாரா? திருமணத்தின்போதே