பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

b), turr. 339 அவர் வெள்ளைக் கதர் தவிர வேறு உடுத்த வில்லையே”.ே 'தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர். தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால், காலம் செல்லச் செல்ல முழுதும் உன் வழியில் வந்துவிடுவார். உலகத்தில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ்கிறார்கள்! பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா. அன்பால் முழுதும் விட்டுக் கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்,' பேராசிரியர் மங்கையர்க்கரசியார் சில வகைக் கணவர் குறித்து இவ்வாறு குறிப்பிடக் காணலாம் 'உன் கணவன் உன்மேல் பேரன்பு காரணத் தாலும் உன்னைவிட்டுப் பிரிய மனமில்லாமல் எந்நாளும் உடன் இருக்கலாம். அல்லது உன்மேல் உள்ள சந்தேகத்தாலும் உன்னைவிட்டுப் பிரியாமல் நிழல்போல் தொடர்ந்து வரலாம். அதைத் தவறாகக் கொண்டு உன்மேல் உள்ள தீராக்காதல் என்று எண்ணிவிடக் கூடாது ' 'அடங்கி நடக்கும் மனைவியையே ஒருவன் நாடு கிறான். அடங்கி நடக்கும் கணவனையே ஒருத்தி நாடுகிறாள். என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல் பணிவாக நடக்கும் கிளர்க்கையே யாரும் விரும்புகிறார்கள். எதற்கும் இசைந்து நடக்கும் வேலையாளையே எல்லோரும் தேடுகிறார்கள். இது