-348 இலக்கிய ஏந்தல்கள் ஷா கூறுவது போல், விலகுவதற்குக் காரணம் என்ன என்று கேட்க நீதி மன்றமும் முன்வரக்கூடாது. விலக உரிமை இல்லாமல் கட்டுப்படுத்துவதற்கு மணம் -திருமணம் என்ற பெயரே கூடாது!" 'குடும்பம் என்றால் ஒருவரின் மனக்கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்டது. ஆனால், உள்ள கவலையை வளர்த்து, மீளாத் துன்பத்தில் வருந்துவதானால், அந்தக் குடும்பத்தைக் கலைத்து விடுவதே நல்லது. முடிந்தால் வாழலாம்; முடியா விட்டால் பிரியலாம். உலகம் பரந்த உலகம். எல்லோருக்கும் இங்கே இடம் உண்டு. அவரவர்கள் தங்களுக்குப் பொருத்தமான இடம் தேடிக் கொண்டு வாழ்வதே நல்லது." மனைவி கணவன் மணமறிந்து நடந்தால் மனை வாழ்வு சிறக்கும் என்பது மு,வ.வின் நம்பிக்கை. எனவேதான் மேலே க ண் ட வா று குறிப்பிட்டார். ஆயினும் சிலவிடங்களில் பெண்ணிற்காக இரங்கும் பெருமனமும், பெண்ணிற்கு உரிமை நல்கவேண்டும் என்ற முற்போக்குக் கருத்தினையும் முறையே வற்புறுத்தியிருக்கக் காணலாம். 3. அகல் விளக்கில் வரும் வேலு என்ற கதை மாந்தர் பெண்ணின் வாழ்விற்கு இரங்கிப் பேசுவன வருமாறு : பெண் என்றால், கணவன் சொன்னதைக் கேட்டு, வாய் திறக்காமல் பணிந்து நடக்கவேண்டுமே. தவிர, கணவன் சீரழியும் நிலையிலும் அன்பான இடித்துரையும் சொல்லக்கூடாது. தன் உரிமையை. நிலைநாட்டித் தற்காப்பு முயற்சியும் செய்யக்கூடாது. உரிமையே இல்லாத பெண், கணவன் கெடும்போது
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/349
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை