பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - இலக்கிய ஏந் தல்கள் சங்ககாலத்தில் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல், வெண்பா முதலியன வழங்கி வந்தன. அவரோ வாரார்-முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை யிடைமகன் சென்னிச் சூடிய வெல்லாஞ் சிறுபசு முகைய -குறுந்தொகை. 221 என்ற குறுந்தொகைப் பாடலில் தலைவியின் பிரிவுத் துன்பம் உணர்ச்சிப் பாங்காக வடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியவிடியும், அதனடிப்படையில் தோன்றிய ஒசையும் காரணம் எனலாம். அவரோ என்ற சொல் இங்கு உணர்த்தும் பொருள் சிறப்பிற்குரியது. சங்கம் மருவிய காலமாகிய சிலப்பதிகாரக் காலத்தில் பாக்களின் உருவ வளர்ச்சியில் பலவகை மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்வேறு புதிய யாப்பு வடிவங்களையும், துறை, தாழிசை, விருத்தம் ஆகிய பாவினங்களையும் புதுவகை இலக்கணச் சாயல், உருவமைப்பு ஆகியவற்றோடு இளங்கோவடிகள் படைத்து வழங்கினார். தன் காலத்துக்கு முன்னர் வழங்கிய சமுதாயப் பாடல்களுக்கு இளங்கோவடிகள் இலக்கியத் தகுதியையும் யாப்பு வடிவத்தையும் வழங்கினார். தம்முடைய தண்ணளியுங் தாமுந்தம் மான்றேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால் - -சிலப்பதிகாரம்; கானல்வரி 32