பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(50 - இலக்கிய ஏந்தல்கள் படைக்கப்படும் கதைமாந்தர்கள் இன்னின்ன முறையில் அமையவேண்டும் என்ற வரையறையும் சுட்டப்பட்டது. ஆக இலக்கியங்களில் மாந்தரின் இயற்பெயர் சுட்டப்படக் கூடாது; தலைவன் தலைவி முதலியோர் இன்னின்ன பண்பு நலன்களை உடையவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட ஒழுக்கம் நிகழ்ந்த தாகப் பாட வேண்டும். பாத்திரங்களின் கூற்றுமொழியாக அமைய வேண்டும் போன்ற பல்வேறு மரபுகள் விதிக்கப் பட்டிருந்தன. அதுபோல் புறப்பொருட் பாடல்களுக்கும் திணை துறை அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தொல்காப்பியச் செய்யுளியலிலும், மரபியலிலும் பாடு பொருள் பற்றிய பல செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இலக்கியம் குறிக்கோள் தன்மையில் அமைய வழி வகுத்தன. இன்றைய புதுக்கவிதையாளர்கள் இவைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு மேலைநாட்டு இலக்கியப் பாணியில் மேனாட்டு இலக்கியங்களை அடியொற்றிக் கவிதை செய்கின்றனர். இனி, பாடு பொருள்கள் புதுக்கவிதையில் சுட்டப்பட்டுள்ள பாங்கி னைக் காணலாம். மறுமலர்ச்சிக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் மூலமாக விளங்கும் பாரதியாரின் கவிதையில் புதுக்கவிதையின் உள்ளடக்கம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது சொற்புதிது சோதி மிக்க நவகவிதை எங்காளும் அழியாத மகாகவிதை - பாரதியார் கவிதைகள் என்பது புதுக்கவிதைக்கு முழுதும் பொருந்தும் எனலாம்.