பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்புகளின் அடிப்படையில் மகளிரைப் பாதிக்கும் செய்திகள் - இருபதாம் நூற்றாண்டு, அறிவியல் விந்தைகள் பற்பலவற்றைப் படைத்துக் காட்டிய நூற்றாண்டு. ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், இருதய மாற்றுச் சிகிச்சைகள், சோதனைக்குழாய்க் குழந்தைகள் என எண்ணற்ற புதுமைகள் பூக்கின்ற ஊழியாக இந் நூற்றாண்டு காட்சி தருகிறது. புற உலகில் விளைந்துள்ள பற்பல மாற்றங்களுக்கெல்லாம் மனிதனின் அரம்போலும் கூரிய அறிவே காரணம். இவ்வறிவு அகத்தின் வளர்ச்சிக் கும் செம்மைக்கும் துணைநின்றதா? போரும், பூசலும், கலகமும் மதவெறியும் சாதித்தினவும் மங்கிமடிந்தனவா? ஏழை செல்வர். ஆண் பெண், உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதமற நிறுத்துகின்ற சமநிலை கண்ணுக்குத்தெரிகிறதா? கொலைகளும் கொள்ளைகளும் மணவிலக்குகளும் மன முறிவுகளும் அறிவுத்திரிவுகளும் குறைந்திருக்கின்றனவா? இல்லை இல்லை, இல்லை எனலாம். அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பிலாத வர். ஆம். மனிதன் அ றிவைப் பெருக்கிய அளவுஉணர்வைப் பக்குவப்படுத்தவில்லை. அதற்குரிய கருவிகளை அவன்