பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ø.tory. 59 போன்றவை பெண்ணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணே எப்படித் தடையாகிறாள் என்பதை எடுத்து உணர்த்துகின்றன. அலர்துாற்றுதல், வம்புப்பேச்சு, ஆகியன எல்லாம் பெண்களைக் குறித்தே அமைகின்றன. 1955க்கு முன் மணவிலக்கு என்பது இந்தியாவில் ஒரு புதுமையான செய்தியாகும். இன்று டாக்டர்கள், வழக்கறி ஞர்கள், பேராசிரியர்களிடையே மணவிலக்குகள் அதிகமாகியுள்ளன. இதனால் இவர்களின் குழந்தைகள் மனப் பாதிப்படைகின்றனர். ஆணாதிக்க மனநிலை தலைவன் தலைவி, நாயகன் நாயகி, பொன்னன், பொன்னி, திருடன் திருடி என்றெல்லாம் சமநிலைப் பாற் பெயர்கள் உள்ள சமூக வழக்கில், மனைவி, இல்லாள் என்பதற்கு ஆண்பாற் பெயர்கள் இல்லை. இவை அவளை வீட்டிலேயே இருத்துகின்ற நிலையைக் காட்டும் பெயர் கள். தலைவி என்பது காதல் நிகழ்ச்சியில்தானே தவிர அவைக்குரிய தலைவியாகக் கருதப்படும் நிலையில் @6bana). Chairman, Cameraman, Manhood, Makeup man என்பனவெல்லாம் ஆணுரிமையின் மேலாதிக்கத்தைக் காட்டும் சொற்கள். பெண்கள் இன்று இத்துறையிலெல் லாம் ஈடுபடுவத ற்கேற்பச்சொல்நிலையிலும் Chair Person, Camera Operator, Adult hood, Makeup Person 6T60tly பொதுமை வேண்டும். எழுதுவோர் இவ்வாறு எழுத வேண்டும். இந்தப் பணி ஆணுக்குரியது. இந்தப் பணி பெண்ணுக்குரியது என்ற பாகுபாடு நீங்கவேண்டும். எல்லா நாவல்களிலும் சிறுகதைகளிலும் சமைப்பவளாகப் பெண்தானே காட்டப்படுகிறாள். அவள் அலுவலகம் போகிறாள், காய்கறி விற்கிறாள், வீடு கட்டுகிறாள், சமைக்கிறாள், என்று எல்லாவற்றுக்கும் உரியவனாகும்