பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 இலக்கிய ஏந்தல்கள் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்! p5rrLlg.6ür SPG5olol.Jl 1Irl Gol_ć (National Integration) குறிப்பிடும்போது சிந்து நதியில் ஒடும் படகில் சேரநாட்டு பெண்களுடன் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டித் தமிழர் உலா வரலாம் என்றார். சிந்துநதியின்மிசை நிலவினிலே சேரகன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் - தோணிகளோட்டி விளையாடி வருவோம். இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தைப் பின்வருமாறு வற்புறுத்து சின்றார்: * ஒன்றுபட்டால் உண்டு வர்ழ்வே-நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த ஞானம் வந்தாற்பின் கமக்கெது வேண்டும்? நனவாக வேண்டிய கனவுகளைக் கவிஞர் காண்கிறார். சிங்களத் தீவிற்கொரு பாலமும், சேதுவை மேடுறுத்தி ஒரு வீதியும் அமைக்க வேண்டும் என்றும் கூறும் கவிஞர் வங்கத்தில் உபரியாக ஒடி வரும் நீரின் மிகுதியைக் கொண்டு மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்கிறார். இப்போது கங்கை-காவிரி இணைப்புப் பற்றிப் பேசப்படுகிறது. எனவே பாரதியாரை, மக்கள் ஆக்கா