பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 72 இலக்கிய ஏந்தல்கள் எல்லா வேற்றுமைகளும் நீங்கிவிடும் என்கிறார் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த ஞானச் செருக்குங் கொண்ட செம்மை மாதராகப் புதுமைப் பெண்ணைப் பாரதியார் படைத்துக் காட்டு கிறார். விரும்பிய ஆண்மகனை மணந்து, அவன் அறச் செயல்களுக்கெல்லாம் துணை நின்று முன்னைக் காட்டி லும் மாதர் அறங்களைச் சிறப்பாகச் செய்வோம் என்று புதுமைப் பெண்கள் முழக்கமிடுகின்றார்கள். - அடுத்து, குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளை பாரதியார் பகர்ந்துள்ளார் 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பது பழமொழி. பாரதியாரின் பாப்பாப் பாட்டு உலகமொழிகள் அனைத் திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய அற்புதமான பாட்டாகும். சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று குறிப்பிட்டு, துன்பம் நெருங்கி வந்தபோதும் சோர்ந்துவிடலாகாது என்று குறிப்பிட்டு, அறிவு மிகுந்த தெய்வம் வருந்துன்பம் அத்தனையும் போக்கிவிடும் என்றும் குறிப்பிடுகின்றார். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதலும், தெய்வம் உண்மையென்று அறைதலும், வயிரம் போன்று உறுதி வாய்ந்த நெஞ்சமும் வாழும் முறைகள் என்று வகையுற எடுத்து மொழி இன்றார். * - உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும் வயிர முடைய நெஞ்சு வேணும்-இது வாழும் முறைமையடி பாப்பா! என்கிறார்.