பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.t.1m’. 79 என்று கிளியையே நாம் அழகிற்கு எல்லையாகப் பேசு கிறோம். குழந்தை சின்னஞ்சிறு கிளி; சிங்காரக் கிளி, செல்வம்-பணம் தேயும் நிலையுடையது. ஆனால் இக்குழந்தைச் செல்வமோ வளர்ச்சியும் வாழ்வும் உடையது. எதிர்காலத்திற்கெனச் சேமித்து வைக்கக் கூடியது; செல்வக் களஞ்சியம். புத் என்ற நரகத்திற்குப் போகாமலிருக்கப் புத்திரர் வேண்டும் என்கின்றன வடமொழி நூல்கள் பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற என்றார் தெள்ளு தமிழ் வள்ளுவர். இம்ம்ை யுலகத்து இசையுடன் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப சிறுவர் பயந்த செம்மலோர்’ என்கிறது அகம். படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் மயக்குறுமக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழுநாளே என்று குழந்தைக் குலத்தின் சிறப்பைச் சொல்லிலே வடித்தான் சங்ககாலப் பாண்டியன் அறிவுடை நம்பி. அம் மரபில் வந்த பாரதியார் என்னைக் கலி தீர்த்தே ஏற்றம் புரிய வந்தாய் என்று பாடுகிறார், 'ஏழ்பிறப்பும் தீய ை தீண்டாப் பழி பிறங்காப் பண்புடை மக்கள் பெறின் என்ற வள்ளுவர் வழி நிற்கிறார் பாரதி. பிள்ளைக் கணியமுதே கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே என்ன அழகான உயிரோட்டமான தொடர். ஊமைப்பட சினிமாக் காலத்திலே வாழ்ந்து அதன் பின்னர்ப் பேசும்பட சினிமாப் பாாத்தவர்க்கு இத்தொட அருமை விளங்கும். "ஒருவன் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே. என்று பாடினார் பதினேழாம் நூற்றாண்டின் இணை யற்ற தெய்வக் கவிஞரான குமர குருபரர் ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞரான பாரதி பேசும் பொற்சித்திரமே என்று குழநதையைப்