பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இலக்கிய ஏந்தல்கள் மங்கை ஒருத்தி தரும் சுகமும்-எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம் தமிழை அழிக்கவரும் இந்தியினைக் கவிஞர் சாடும் வேகத்தினைப் பாருங்கள் : மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-எம்மை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை தீங்குள்ள இந்தியை காம் எதிர்ப்போம் உயிர் தித்திப்பை எண்ணிடப் போவதில்லை. சமுதாயச் சீர்திருத்தம் தொடக்க நாள் முதலே சமய பேதத்தையும், சாதி பேதத்தையும் வெறுத்தொதுக்கியவர் கவிஞர் அவர்கள். கொள்கை நெ றி நிற்கும் குன்று அவர், சமுதாயப் புரட்சி செய்து, ஊதையிற் துரும்புபோல் அலைக்கழித்துப் புதிய தோர் உலகம் செய்த புரட்சிக் கவிஞர் அவர். - ஒன்றுபட்ட இரண்டு உள்ளங்களைச் சாதி, சமயம் பொருள் பேதங்களைக் காட்டிப் பிரிப்பது அடாத செயல் என்பது கவிஞர் தம் அழுத்தமான எண்ணம் : காத லிருவர்களும்-தம் கருத்தொரு மித்தபின் வாதுகள் வம்புகள் ஏன்?-இதில் மற்றவர்க் கென்ன உண்டு? விதவைகள் மறுமணம் செய்து கொள்ளவேண்டும்; அதற்கு இந்தச் சமுதாயம் ஆதரவு காட்டவேண்டும் என்று வற்புறு த்திப் பாடிய க்விஞர் அவர்.