பக்கம்:இலக்கிய தீபம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 இலக்கிய தீபம் தோன்றிய காலத்தை வரையறுத்தலும் இயலாததொரு காரியம். செய்யுட்களின் ஆசிரியர்களுடைய பெயர்களே மறைந்து விட்டன. 18 செய்யுட்களை இயற்றியோர்க்கு அவரவரது செய்யுட்களில் வந்துள்ள அருந்தொடர்களே பெயராக அமைந்துள்ளன. எஞ்சிய செய்யுட்களினும் கால வரையறை செய்தற்குப் பயன்படும் ஆதாரங்களையுடையன மிகமிகச் சிலவேயாம், அவற்றுளொன்றை யெடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து காலத்தை அறுதியிட்டு அக் காலத்திற்கு முன்னாகப் பின்னக இந்நூற் செய்யுட்கள் இயற்றப் பெற்றனவென்று கோடலே இயலுவதாம். இந் நெறியையே பின்பற்றி மேல்வரும் ஆராய்ச்சியை செழ்த்து கின்றேன். அடுத்த கட்டுரையில், நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையின மொழிமோ வெண் கோட்டி யானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே (குறுந். 75 என்ற செய்யுளைக் குறித்து ஒருசில கூறியுள்ளேன். குறுந் தொகையை முதலிற் பதிப்பித்தவராகிய சௌரிப் பெருமா னரங்களூர் 'வெண்கோட்டியாளை பூஞ்சுனைபடியும், பொன் மலி பாடிலி பெறீஇயர்' என்று பதிப்பித்தனரென்றும் உண்மையான பாடம் மேலே தந்துள்ளதேயென்றும் பல முகத்தா வாரசய்ந்து தமிழிலும் (கலேமகன்) ஆங்கிலத்திலும் (டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவுமலர் வெளியீடு) சில வருடங்கட்கு முன்னரே என்னால் எழுதப்பட்டது. டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களும் தனிப்பட ஆராய்ந்து உண்மைப் பாடத்தை அவர்களது பதிப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/113&oldid=1481713" இலிருந்து மீள்விக்கப்பட்டது