பக்கம்:இலக்கிய தீபம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 இலக்கிய தீபம் கூறியதாகத் துறைகாட்டுகின்றனர். எனவே, தோழிக்கும் பாணனுக்கும் பொருந்தக்கூடிய முறையிலேதான் பாடமும் பொருளும் இருத்தல் வேண்டும். 'பாடிலி' என்பதற்குப் பெருமையில்லாதோய்' என்பதைக் காட்டினும் வேறு சிறந்த பொருள் காணுதலும் அரிது. தோழியைப் 'பாடிலி" யென இழித்துரைப்பது தமிழ்நூல் வழக்கன்று. ஆதலால், பெருமையில்லாதோய்' என்ற பொருளும், அதற்குரிய 'பாடி' என்ற பாடமும் கொள்ளத்தக்கன அல்ல. III என்ற இனி, உண்மையான பொருள் யாதென ஆராய்வோம். 'பொன்மலி' என்பதற்குப் 'பொன்மிக்க' எனப் பொருள் கொள்ளுதலே நேரிதென மேலே கூறினேன். இது பொருந்து மாயின், இத்தொடர் ஓர் இடப்பெயர்க்கு விசேடணமாதல் வேண்டும். வெண்கோட்டியானை... படியும் தொடரினையும் விசேடணத் தொடராகவே கொள்ளுதல் நேரிது.இதுவும் ஓர் இடப் பெயரினையே விசேடிக்க வல்லது. இவ் இடம் தன்னகத்து மிக்கு நிரம்பிய பொன்னா லும், தான் அமைந்திருந்த தலத்தின் அருகிலுள்ள நீர்ப் பெருக்கினாலும்,முற்காலத்திற் பெரும்புகழ்பெற்று விளங்கிய தாக இருத்தல் வேண்டும். அதன் பெயர்தானும் கேட்ட வளவிலே உணரக்கூடிய பெருஞ்சிறப்புடையா யிருத்தலும் வேண்டும். 'படிதல்' 'மலிதல்' என்ற விசேடணங்கள் சென்றியையும் 'பாடிலி' என்றதனோடு ஒலியளவில் மிகவும் ஒத்ததாயிருத்தல் வேண்டும். இத்தன்மைகள் வாய்ந்த இடப் பெயரொன்று முற்காலத்துப் பிரசித்திபெற்று விளங்கிய துண்டா? இவ்வினாவிற்குச் சரித்திர முணர்ந்தார் மிக எளிதில் விடையளித்து விடுவர். 'பாடலி' யென்று வழங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/121&oldid=1481721" இலிருந்து மீள்விக்கப்பட்டது