இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
124 இலக்கிய தீபம் இந்த ஆறு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,அகம், புறம் என்ற ஐந்தன் கடவுள் வாழ்த் துக்களும் அவ்வந்நூலின் தொடக்கத்தில் காணப்படுகின் றன. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலிற்குரிய கடவுள் வரழ்த்துச் செய்யுளே நமக்கு அகப்படவில்லை. இச்செய்யுள் இதுவரையில் அகப்படாத முதற்பத்துடன் மறைந்துவிட் டது போலும். 'எரியெள்ளு வன்ன' என்பது பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருத்தல் கூடுமா? அங்ஙமாயின், அகவலோசை பிழைபடாதா?