பக்கம்:இலக்கிய தீபம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதியமான் அஞ்சி 127 வர்த்தி, மகாராஜா,நரேந்திரன்,பார்ஷிணிகன், பட்டதரன், மண்டலேசன், பட்டபாஜ், பிராகாரகன் அஸ்திர கிராகன் என ஒன்பது வகையினராக அரசர்கள் வகுக்கப்படுகிறார் கள். இவர்களுள் சக்கரவர்த்தியாவான் ஆற்றல் மிக்கவன்; நாற் பெருங்கடலெல்லை வரையும் தனது நாடு பரந்து கிடக் கும்படி ஆணைபுரிவோன்; இதற்கு அறிகுறியாகத் தனது அரண்மனை வாயிலில் வெற்றிமணியுடையவன்; நன்மையுந் தீமையும் ஆராய்ந்து நடுநிலை சிறிதும் குன்றாது முறை செய் பவன்; பெரும்புகழ் வாய்ந்தவன்; செல்வத்தில் சிறந்தவன்; குடிகளை அன்புகொண்டு ஆள்பவன் ; அரசர் அனைவர்களா லும் நன்கு மதிக்கப்படுபவன்; பேரரசன். மகாராஜன் அல்லது அதிராஜன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் ஏழரசர் நாட்டுத் தலைமைகொண்டவன்; அறுவகைக் குணங்களுடையவன் ; அறுவகை உ றுப்புக்க ளுடையவன்; நீதி நூல்களிலும் ஒழுக்க நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவன்; சூரியன் அல்லது சந்திர வம்சத்தைச் சார்ந்தவன். நரேந்திரன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் தன்னின் மெலிந்த பகைவரிடமிருந்து வென்று கொண்ட மூன்று அரசர் நாடுகளுக்குத் தலைவன்; பார்ஷிணிகர், பட்டதார் முதலிய மன்னர்களால் வணங்கப்படுபவன்; ராஜ்ய தந்திர நோக்குடையவன்; பகை மன்னரைப் பணிவிப் பவன்; நற்செயலாளன்; விழா எடுத்து மகிழ்வதில் ஈடுபடு பவன். பார்ஷிணிகன் எனப்படுவான் ஓர் அரசுக்குத் தலைவன்; ஒரு கோட்டை யுடையவன்1; ஆறு உறுப்புக்களையுடைய 1. 'ஓ ரெயில் மன்னன்' என்ற சங்க நூல் வழக்கு (புறம் 338) இங்கே அறியத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/136&oldid=1500946" இலிருந்து மீள்விக்கப்பட்டது