________________
12. மௌரியர் தென்-இந்தியப் படையெடுப்பு தமிழர் சரிதத்தின் ஆராய்ச்சி வரலாற்றில் எனது கண்பர் இராவ்ஸாஹெப் மு. இராகவையங்காரவர்களது சேரன் - செங்குட்டுவன்' தலைமையான ஓர் இடம் பெற் றிருக்கிறது. இந்நூலால் ஆராய்ச்சியுலகில் ஒரு கிளர்ச்சி எழலாயிற்று. சேரரது பண்டைத் தலைநகர் யாது? அவர் களது தாயக்கிரமம் யாது? அவர்கள் ஒரே குடும்பத்தினரா? பல பிரிவினரா? அவர்களது வெற்றி வரலாறு யாது? கடைச்சங்க காலம் யாது? சிலப்பதிகார காலம் யாது? என்பன முதலியன அறிஞர்கள் தெளிதற்குரிய விஷயங்களா யமைந்தன. இந்நூல் 1915-ல் வெளிவந்தது. எனவே, இப்போது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பல அறிஞர் களும் மேற்கூறியவற்றுள் ஒவ்வொன்றனை யெடுத்து ஆராய்ந் துள்ளனர். ஆனால், ஒரு சில தவிர, ஏனைய இன்னும் புதிர்க ளாகவே உள்ளன. இப்புதிர்களுள் ஒன்று 'மௌரியர் தென் - இந்தியப் படையெடுப்பு.' மீண்டும் இதனைக் குறித்து ஆராயவேண்டும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. முறைப்பட ஆராயுமுன், ஒரு கண்டனவுரையை இங்கே குறிப்பிடாமலிருக்க முடியாது. காலஞ்சென்ற தஞ்சை ஸ்ரீநிவாஸபிள்ளை யவர்கள் 'சேரன்செங்குட்டுவன் வெளிவந்த சில மாதங்களுக்குள் விரிந்த ஆராய்ச்சி யுரை யொன்று செந்தமிழில் (1915) வெளியிட்டனர். இவ்வுரை நடுநிலை குன்றாது சரித்திரவுணர்ச்சியோடு எழுதப்பட் டுள்ளது. மௌரியர் படையெடுப்பைக்குறித்து இதிற் காணும் கண்டனத்திற்கு விடைகூறல் எளிதன்று. மேலும், சிற்சில ஐயப்பாடுகள் தோன்ற இடமுண்டு.