பக்கம்:இலக்கிய தீபம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 இலக்கிய தீபம் பட்டினி நோன்பினால் பெள்குளத்தில் உயிர்துறந்தான் என்று ஜைன வரலாறு கூறும். இவ்வரவைப் படை யெடுப்பு எனக் கூறுதல் சிறிதும் தகாது. மைசூர்வரை வெற்றியால் மௌரிய அரசாட்சி பரவியிருந்தது என்பதற்கு இது சான்றாகலாம். சந்திரகுப்தனின் மகனாகிய பிந்துஸாரன் படையெடுத்துவந்து தென்னாட்டை வென்றுகொண்டான் என்று தாராநாத் கூறுவர். இவர் சுமார் முந்நூறு ஆண்டு கட்குமுன் வாழ்ந்த ஓராசிரியர்; இவர் கூறுவது தக்க சான் றாகாது.காரவேலன் சிலாசாஸனத்தால் பிந்துஸாரனது படையெடுப்பு அறியப்படுகிறது என்பர் ஜெயஸ்வால். இச்சாஸனத்தின்பொருள் நன்கு விளங்கவில்லையென்பது பெரும்பாலோர் கருத்து. அசோக சக்ரவர்த்தி கலிங்க நாடொன்றனையே படையெடுத்துக் கைப்பற்றியவர் என்பது சரித்திரப்பிரசித்தம். இவரது சிலைத்திருவாணைகளும் மைசூர்க் குத் தெற்கில் காணப்பெறாதது அந்நாட்டுவரைதான் இவரது ஆட்சி நடைபெற்றிருந்தது என்பதற்கு அறிகுறியாகும். அன்றியும், இவர் சேரசோழபாண்டியர்களைத் தம்மொடு நட்புரிமை பூண்ட தனிமுடியரசுகள் எனக் கின்றனர். இங்ஙனமிருப்ப, பாண்டியர் சேனாபதியான மோகூர் கோசருக்குப் பணியாமையினோலே அவருக்குத் துணையாக மோரியர் வந்தனர் என்பது சிறிதும் ஒப்புக் கொள்ளத் தகாததாம். குறிப்பிடு மாமூலனார் தம்காலத்துச் சரித நிகழ்ச்சியைக் குறித்த வரும் அல்லர். டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலி னோரும் சமகால நிகழ்ச்சியன்றெனவே கூறினர் (Begin- nings of S. I. History p. 100). பழங்கதையொன்று மேற்காட்டிய செய்யுட்களின் அடிகளாற் குறிக்கப்பட்ட தெனலே பொருத்தமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/153&oldid=1500971" இலிருந்து மீள்விக்கப்பட்டது