________________
13. காவிரிப்பூம் பட்டினம் பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் என்று நக்கீரர் அகநானூற்றில் (205) பாடுகிறார். சங்கப் பாட்டுக்களில் பட்டினப் பாலையைத் தவிர, இது ஒன்றே காவிரிப்பூம் பட்டினத்தை அப் பெயரால் நேர்படக் குறிப் பது. இப்பட்டினத்திற்குரிய பிறிதொரு பெயர் புகார் என்பது. இப்பெயரை மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற் செய்யுள் நாரை யொய்யு மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யாணர்க் குரவை யயரும் காவிரி மண்டிய சேய்வீரி வனப்பிற் புகர்ச் செல்வ எனப் பதிற்றுப்பத்தில் (73) அரிசில் கிழாரும் பூவிரி யான்றுறைக் கணைவிசைக் கடுநீர்க் காவிரிப் பேரியாற்று அயிர்கொண் டீண்டி..... ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம் களின்பெறத் தைஇய ......மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் மகர நெற்றி வான் தோய் புரிசைச் சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லிற் புகாஅர் என அகநானூற்றில் (181) பரணரும் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவென் நினக்கே என அகநானூற்றில் (110) போந்தைப் பசலையாரும் குறித் இ .தீ.10