________________
10 இலக்கிய தீபம் முல்லைப்பாட்டு இங்ஙனமாக, சிறுபாணாற்றுப்படை, வானம் வாய்த்த வளமலைக் கவாஅற் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திற லணங்கின் ஆளியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும், சுரும்புண நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற் பறம்பிற் கோமான் பாரியும், கறங்குமணி வாலுளைப் புரவியொடு வையக மருள ஈர நன்மொழி இரவலர்க் கீந்த அழல்திகழ்ந் திமைக்கும் அஞ்சுவரு நெடுவேற் கழல்தொடித் தடக்கைக் காரியும், நிழல்திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற் கமர்த்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும், மால்வரைக் கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த உரவுச்சினங் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் அரவக்கடற் றானை அதிகனும், கரவாது நட்டோ ருவப்ப நடைப்பரி காரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கொட்டு நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் எனவாங்கு எழுசமங் கடந்த எழுவுறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் (84-112) என்ற அடிகளிற் கடையெழுவள்ளல்களின் வரலாற்றை இறந்தகாலச் செய்தியாக உரைக்கின்றது. ஆகவே, இவ் வள்ளல்களின் காலத்திற்குப் பின்னர் இந்நூல் இயற்றப் பெற்றதாதல்வேண்டும். பரணர், கபிலர், முடமோசியார்,