பக்கம்:இலக்கிய தீபம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 29 இக்கரரெனப் பெற வைக்கின்மூர், சங்கச் செய்யுட் கனில் ஓரிடத்தேறும் இவ்வழுதியைக் குறித்து சுக்ரேர் பாடவில்லை. எனவே, இது கற்பிதம் என ஒதுக்கிவிட லாம். உண்மையில் இவரது காலம் இவர் மேற்கோளா ஆண்டுள்ள பாண்டிக் கோவையின் பாட்டுடைத் தலைவ ராகிய நெடுமாறர் காலத்திற்கு, அதாவது ஏழாவது நூற் றாண்டிற்கு, பிற்பட்டதாகும். இவ்வுரையிலே நாலடி, ஜீவக சிந்தாமணி முதலிய நூல்களின் கருத்தும் சொற்றொடரும் காணப்படுதனால் பத்தாம்நூற்றாண்டிற்கும் பிற்பட்டதெனக் கொள்ளுதல் வேண்டும். பெரும்பாதும் பதினோம் நூற் றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் இவ் கரை தோன்றியது எனக் கொள்ளுதன் மிகவும் பொருத்த மாகும். ஆதலால் களவியல் உரைகண்ட நக்கீரர் சங்க காலத்து நக்கீரரின் வேறாவர் என்பது தெளிவாம். நக்கீரர் நாலடி நானூறு என்ற ஒரு நூல் யாப்பருங்கல விருத்தியில் (பக்கம் 217) காணப்படுகிறது. ‘நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கலிசைச் செப்பலோசை; முத்தொள்ளாயிரத்து வண் ணத்தால் வருவனவும் எல்லாம் ஒழுகிசைச் செப்ப லோசை' என்பது விருத்தியின் அச்சுப் பிரதியில் காணும் வாக்கியம். இங்கே நாலடி நானூறு, முத்தொள்ளாயிரம் என்பன நூற்பெயர்களாம். நாலடியார் என இக்காலத்து வழங்கும் கீழ்க்கணக்கு நூலே நாலடி நானூறு என்பது, மயிலைநாதர் 'அளவினல் பெயர் பெற்றன பன்னிருபடனம், நாலடி நானூறு முதலாயின என்பர் (சூத்திரம்-48). காரிகை யுரைகாரர் 'திருவள்ளுவப் பயன், நாலடி நானூறு முதனாகிய கீழ்க்கணக்குள்ளும்! என்பர் (40 உரை). நாலடி நானூறு சமணமுனிவர் பலரால் இயற்றப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/38&oldid=1481516" இலிருந்து மீள்விக்கப்பட்டது