________________
46 இலக்கிய தீபம் கயலார் நாரை போர்விற் சேக்கும் பொன்னணி யானைத் தொன்முது வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய என்றுஞ் செய்புட்பகுதி (புதம், 24) தெரிவிக்கின்றது. இவன் செருவென்ற பொழுது பகைவரது முரசங் கைக் கொண்டா னென்பது உடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி, பிணியுறு முரசங் கொண்ட காலை என்னும் வரிகள் (புறம்,25) புலப்படுத்துகின்றன. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகஎன் னிலவரை: புரப்போர் புண்கண் கூர, இரப்போர்க் கீயா இன்மையா னுறவே என்னும் அடிகள் (புறம், 72) இவனுக்குத் தமிழ்ப்புலவர் கள் மாட்டுள்ள அன்பிலையும் கன்குமதிப்பினையும் இவனது ஈகைக் குணத்தையும் மதுரைக்காஞ்சி இயற்றிய மாங்குடி மருதனர் இவனது வாயிற்புனவர் என்பதையும் நன்கு வலி அறுத்துகின்றன. இவன்செருவென்ற காலத்தில் ஆண்டின் இளையவனென்பது பொருநனும் இளையன் கொண்டியும் பெரிதென என்னும் அடி (புறம்,78) உணர்த்துகின்றது. இவ்வாறே இவன் தற்பெருமையுடையானல்ல னென்பது புறநானூற்று 77-ம் செய்யுளால் இனிது பெறப்படுகின்றது, இவனது குணாதிசயங்கள் இவ்வாறன்னன, இனி இவள் வாழ்ந்து அரசு புரிந்த காலம் இது. வன நிச்சயிக்க முயலுவோம்.