பக்கம்:இலக்கிய தீபம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் காலம் 47 பண்டைக்கால ஆராய்ச்சியிற்றலையிட்ட அறிஞர்களுக் குள்ளே,டாக்டர் S. கிருஷ்ணசாமியையங்காரவர்கள் முன் னணியில் நிற்பாராவர். இவர்கள் "கடை வள்ளலார் காலம் " சு என்றதோர் வியாசம் வெளியிட்டுள்ளார்கள். அதில் கடைச்சங்கப் புலவர்கள் என்று கருதப்பட்டவர் களுட் பலர் கி.பி. 100 முதல் 300 வரையிலுள்ள காலத்தில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தார்களென்றும், அப்போது து பாண்டியர்களில் நெடுஞ்செழியனும், அவன் மகன் இளஞ் செழியலும் அவன் கைன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் செடுஞ்செழியனும், சோழர்களின் கரிகாற் பெருவளத்தானும் அவன் பௌத்திரன் கோக்கிள்ளி வும், சேரர்களிற் செங்குட்டுவனும் அரசுபுரித்து வந்தனர் என்றும் கூறியிருக்கின்றர்கள்1. இவர்கன் காலஞ்சென்ற ஸ்ரீ வி. கனகசபைப் பிள்ளையவர்களைப் பின்பற்றியே இம் முடிபிற்கு வந்துள்ளார்கள். பிள்ளையவர்கள் கரிகாற் பெருவளத்தானுக்கும் கோக்கிள்ளிக்கும் இடையில் நலங் கிள்ளி யென்றொருவன் இருந்ததாகக் கொள்வார்கள். இலங்கையரசனான முதற்கஜபாகு கண்ணகி யென்னும் பத்தினிக் கடவுட்குச் செங்குட்டுவன் கோயிலமைத்தபோது வந்திருந்தான் என்றும்,அவனும் இளஞ்செழியனும் உறை யூர்க்கின்னியும் அக்கடவுட்குத் தனித்தனியே கோயிலமைத் தார்களென்றும், சிலப்பதிகாரத்தால் நன்கு விளங்குகின்றன. கஜபாகுவின் காலம் கி.பி. 171-193 என்று இலங்கைப் புராதன சரித்திரமாகிய மகாவம்சத்தினைப் பதிப்பிட்ட கெய்கச்{Goiger)கூறுவர். இதனாலே இளஞ்செழியனுக்கும் 1. இங்குக் குறித்த முறைகளெல்லாம் வெற்றூகங்களே யாம். ஆதாரம் யாதும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/56&oldid=1481534" இலிருந்து மீள்விக்கப்பட்டது