பக்கம்:இலக்கிய தீபம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 48 இக்காரணங்களால் நக்கீரர் ஆண்டின் முதியவரா யிருந்தபோது நெடுநல் வாடை யியற்றினாரென்பதும் அம் பாட்டுடைத் தலைவனது காலம் 3-ம் நூற்றாண்டின் நடு பகுதிபாயிருக்கலா மென்பதும் நிச்சயித்தல் தகும். இந்நூலில் வரும் ஜோதிஷக் குறிப்பும் பிற செய்திகளும் இத்துணிவினையே வலியுறுத்துகின்றன. இவைபற்றி முன் னரும் கூறியுள்ளேன். தலைக்குறிப்பு இனி, நெடுநல்வாடை யென்ற செய்யுளின் தலைக்குறிக் பைப்பற்றிச் சிறிது சிந்தனை செய்வோம். இப்பெயர் நெடி. தாகிய நல்லதோர் வாடையென விரிதலில் பண்புத்தொகை யாகும். பகைவர்மேற் சென்ற தலைவனைப் பிரிந்து இராக் காலங்களிற் சிறிதும் இமை பொருந்தப் பெறாளாய் இருக் கும் தலைவி மிகவும் வருத்தத்தோடு உயிர் தாங்குபவளாதல் இயற்கை. மற்றைய காலங்களைக் காட்டினும் வாடைக் காலத்தில் நுகர்ச்சி விருப்பம் மிகுதியும் நிகழ்வதாகும். ஆத லால் அக்காலத்தே அந் நுகர்ச்சி பெறாதது மட்டுமேயன்றி, இன்னுயிர் மணாளன் தன்னருகிருக்கவும் பெறாதாளாகிய தலைவிக்கு ஒவ்வொரு நொடியும் ஓரூழியாகத் தோன்றும் என்பது வெளிப்படை. ஆகவே, அவட்கு இக்காலம் நெடிய தோர் வாடைக்காலமாயிற்று. தலைவற்கோவெனில், அவ னது விருப்புப் போகத்தின்கண் மட்டும் நிகழ்வதொன்றன்று, பல அரசர்கட்குள் ஒருவன் எனப் பொதுவாக வைத்தெண்' ணப்படுதலை வேண்டாது, அவருளெல்லாம் தலைமை பெற்று னிவன் என்று புகழப்படுதலைவேண்டி, போகத்தின்கண் மனமற்று, தன்னோடொப்ப வீற்றிருந்த அரசர்கள்மேற் படையெடுத்து வேற்றுப் புலத்துப் போதலை மேற்கொள்ளு கின்றான். பிற அவாவின்கண் எவ்வளவு தூரம் இவள் 9. 8. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/58&oldid=1481536" இலிருந்து மீள்விக்கப்பட்டது