பக்கம்:இலக்கிய மரபு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம் 97 அகவல், வெண்பா, கலிப்பா, கலித்துறை, விருத்தம் முதலிய செய்யுட்களோடு, சிந்து கீர்த்தனம் முதலிய இசைப் பாட்டுக்களும் இந் நாடகத்தில் அமைவதால், ஓசை நயம் மிக்குக் கேட்பவர்க்கு இன்பம் பயக்கும். திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி எடுப்போம் குறிஞ்சிமலர்தெரிந்துமுல்லைக் கொடியில்வைத்துத்தொடுப்போம். பழம்பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் எங்கள் குறக் குடிக்கடுத்த இயல்பிதுகாண் அம்மே முதலான பாட்டுக்கள் ஓசை நயத்தாலும் கற்பனை வளத்தா லும் குறவஞ்சி நாடகத்திற்கு இனிமை ஊட்டுவனவாகும். பள்ளு பள்ளு என்னும் நாடக வகையும் சில நூற்றாண்டு களுக்கு முன் தோன்றியது. புரவலற் கூறி அவன்வா ழியஎன்று அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள் எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே, * எனக் குறிக்கப்பட்ட உழத்திப் பாட்டே பிற்காலத்தில் பள்ளு. நாடகமாக வளர்ந்தது எனலாம். உழவர்களின் வாழ்க்கை யைச் சுவைபட எடுத்துரைப்பது இந் நாடகம். உழுவித்

  • பன்னிரு பாட்டியல், 215.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/101&oldid=1681832" இலிருந்து மீள்விக்கப்பட்டது