பக்கம்:இலக்கிய மரபு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாவல்

உரைநடையில் கற்பனை

கற்பனை என்பது நெடுங் காலம் வரையில் செய்யுள் வடிவில் - பாட்டு வாயிலாகப் - புலப்படுத்தக் கூடிய தாகவே இருந்தது. அதனாலேயே காவியம் முதலியவை வளர்ந்து பெருகின. சில நூற்றாண்டுகளாக, உரைநடை வளர்ந்தபின், உரைநடை வாயிலாகவும் 3 கற்பனையை அமைத்துப் புலப்படுத்த முடியும் என்பது விளங்கிவிட்டது. அதனால் எதையும் உரைநடையிலே எழுதுதல் வளர்ந்து விட்டது. பாட்டு என்பது கற்பனைக்கும் உரைநடை மற்ற வற்றிற்கும் என்று இருந்த நிலை மாறி, உரைநடை எல்லா வற்றிற்கும் உரிய கருவியாக வளர்ந்தபின், பாட்டுக்கும் உரை நடைக்கும் இருந்த வேறுபாடு தெளிவில்லாததாக ஆகிவரு கின்றது.* பாட்டில் உணர்த்தப்படுவன யாவும் உரை நடையாலும் உணர்த்த முடியும் என்று உரைநடை இலக் கியம் வளர்ந்துவருகிறது. உரைநடையில் கற்பனை வளர்ந்த வேகமான் வளர்ச்சி யைக் காட்டுவன நாவலும் சிறுகதையும் ஆகும். சிறப்பாக அமையும் நாவல், பொதுமக்களுக்கு வெறுங் கதையாகவும், அறிஞர்க்குக் கருத்து விளக்கக் கதை

  • Imaginative thought, which formerly expressed itself but rarely

except in verse, now enters into almost every form of prose except the barely statistical. Indeed the.boundary-lines between prcse and poetry have become obliterated, as those between prose and verse have become more than ever rigid. J. C. Shairp, Aspects of Poetry, p. 58.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/109&oldid=1685223" இலிருந்து மீள்விக்கப்பட்டது