பக்கம்:இலக்கிய மரபு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 107 உணர வல்லவர் ஒரு சிலரே. புறத்தோற்றத்தை மட்டும் அறிந்து நினைவில் கொண்டு வருணிக்க வல்லவரால் காவி யமோ கதையோ எழுதல் இயலாது; அகத்துணர்ச்சியை ஆய்ந்து உணர வல்லவரே காவியமும் கதையும் எழுத வல்லவர். சோமர்சட் மாம் என்ற நாவலாசிரியர் தமக்கு வாழ்க்கையை ஆய்ந்துணரும் திறன் மிகுதியாக இல்லை எனினும், உணர்ந்த சிலவற்றைத் தெளிவாகத் தரும் திறன் உண்டு எனக் கூறிக்கொள்கிறார்.* ஆசிரியரின் உணர்ச்சி யனுபவம் கதையாசிரியர் உணர்ச்சி மிக்கவராய்க் கற்பனையில் ஆழ்ந்தால்தான், அவருடைய கதையிலும் பலதிற உணர்ச்சிகளைப் புலப்படுத்தல் இயலும். அவ்வாறு அவர் கற்பனையுலகில் ஆழ்ந்திருக்கும் சில் நாட்களில்தான், கதையின் சிறந்த பகுதிகள் கருக்கொள்ளும். அந்நாட் களில், கதையாசிரியரின் சுற்றுப்புறத்தைவிட உள்ளத் தின் கற்பனையே அவர்க்கு நெருங்கியதாகத் தோன்றும்; உண்மை யுலகத்தைவிடக் கற்பனை யுலகமே மெய்யாகத் தோன்றும்; கற்பனை மாந்தரின் இன்ப துன்பங்களே அவருடைய அனுபவங்களாகும்; கற்பனை மாந்தரின் இன் பத்தில் மகிழ்தலும், அவர்களின் துன்பத்தில் மூழ்கிக் கண்ணீர் வடித்தலும் அவர்க்கு இயல்பாகும். தாம் படைத்த துன்பத்தில் தாமே சிக்கி அழுது அழுது கண்

  • My native gifts are not remarkable, but I have a certain, force of character which has enabled me in a measure to supplement my defi- ciencies. I have common sense. Most people cannot see anything, but I can see what is in front of my nose with extreme clearness; the greatest writers can see through a brick wall. My vision is not so penetrating. -W. S. Maugham, A Writer's Note book. †The creatures of his imagination were more real to him than the characters of every day life. -Hesketh Pearson, Dickens, p. 69.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/111&oldid=1681847" இலிருந்து மீள்விக்கப்பட்டது