பக்கம்:இலக்கிய மரபு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 117 களுக்கு முன் இருந்ததைவிட இப்போது மக்களின் மனம் நுட்பமுடையதாக வளர்ந்திருத்தலால், வாழ்க்கையின் எல்லைகளையும் விதி விலக்குகளையும் எதிர்பார்த்தலைவிட நுட்பமான உண்மைகளையே எதிர்பார்க்கின்றனர் என்கிறார். ஆகவே தனிச் சிறப்புடைய மாந்தரின் விதிவிலக்கான வாழ்க்கைகளைக் கற்பனை செய்து கதைகள் இயற்றுவதை விட்டு, இக் காலத்து ஆசிரியர்கள் பொதுவான மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளின் நுட்பங்களை விளக்குவதில் ஈடுபட்டுள்ளனர். தொடக்கமும் முடிவும் நாவலை இவ்வாறு தொடங்க வேண்டும், இவ்வாறு முடிக்க வேண்டும் என்று கூறும் விதிகள் இல்லை. காவியங் களிலும் நாடகங்களிலும் உள்ளவாறு அல்லாமல், நாவல் களில் எத்தகைய முடிவுகளும் அமையலாம். ரஷ்ய நாட்டுக் கதைகளுக்குத் தொடக்கமும் காணோம் முடிவும் காணோம் என்று சார்ல்டன் என்பவர் கூறுகிறார். வாழ்க்கையை ஒட்டிக் கற்பனைகள் அமைந்தால் இவ்வாறுதான் அமையும் என்றும், வாழ்க்கையில் வரையறுத்த தொடக்கமும் இல் லாமல் முடிவும் இல்லாமல் எப்படியோ அமைவது போல் நாவல்களிலும் அமைவது இயற்கை என்றும் அவரே காரணமும் கூறுகிறார்.* மாறுதல்கள் நாவல் எந்தச் சமுதாயத்தைப் பற்றி எடுத்துரைக் கிறதோ, அந்தச் சமுதாயமே பற்பல மாறுதல்களைப் பெற்று வரும்போது, நாவல் என்னும் இலக்கியவகை இப்படித்தான்

  • Russian novels have no beginning and no end, presumably be- cause in actual life there are neither beginnings nor endings.

--H. B. Charlton, The Art of Literary Study, p. 141. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/121&oldid=1681850" இலிருந்து மீள்விக்கப்பட்டது