பக்கம்:இலக்கிய மரபு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 121 ஒரு நூலில் உள்ளது மட்டுமே இருப்பின், அது சுவை பயக்காது; கலையும் ஆகாது; ஆகவே இலக்கியம் எனப் போற்றப்படாது. அந்நிலை உறாதவாறு கற்பனை அதற்கு உதவ வேண்டும். ஒரு நூலில் கற்பனை மட்டுமே மிகுந்து அமையினும், அது பயன்படாது; வெறும் பொழுது போக்கிற்கான வேடிக்கை நூலாகுமே அல்லாமல் இலக்கியமாக உயர் வடையாது. ஆகவே, உண்மை அதற்கு உதவ வேண்டும். உள்ளதையும் வாழ்க்கையோடு ஒட்டியதையும் கற்பனை குறைந்ததையும் உணர விரும்பும் மனப்பான்மை தொன்று தொட்டு இருந்துவருகிறது. இல்லதையும் வாழ்க்கைக்கு எட்டாததையும் கற்பனை மிகுந்ததையும் உணர்ந்து வியக் கும் மனப்பான்மையும் பண்டைக் காலம் முதல் இருந்து வருகிறது. வாழ்க்கைக்கு எட்டாததை வியந்து போற்றும் மனப்பான்மை மிகுந்திருந்த காலத்தில் நாவல் தோன்றி யிருத்தல் முடியாது. அறிவியல் வளர்ச்சியால், வாழ்க்கை யோடு ஒட்டியதை விரும்பும் மனப்பான்மை சென்ற நூற் றாண்டில் மிகுந்தபோதுதான், நாவல் விரைந்து வளர முடிந்தது. ஆயின், நாவலில் வாழ்க்கையோடு ஒட்டிய பகுதிகள் மட்டுமே உண்டு என்று கொள்ளலாகாது. வாழ்க்கையோடு ஒட்டாத கற்பனைப் பகுதிகளும் நாவலில் இடம் பெறு கின்றன. முன்னைய வகையான நாவல்கள் பெரும்பான்மை யாக உள்ளன என்றும், பின்னைய வகையின சிறுபான்மை யாகவே உள்ளன என்றும் கூறுதல் பொருந்தும். கற்பனைக் கதைகளில் பெயர்களும் காலக் குறிப்புகளும் தவிர மற்றவை எல்லாம் உண்மை என்றும், வரலாற்றில் பெயர்களும் காலக்குறிப்புகளும் மட்டுமே உண்மை என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/125&oldid=1681880" இலிருந்து மீள்விக்கப்பட்டது