________________
122 இலக்கிய மரபு ஒருவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். நாவலில் பெயர் இடம் காலம் முதலியவை புனைந்துரைக்கப் பட்டவையே எனினும், பண்புகளும் உணர்ச்சிகளும் விளைவுகளும் உண்மை என்று கொள்ளத் தக்கன என்பதே அவர் கருத்தாகும். பல வகை பாட்டு என்பது. ஒருவகைக் கலையாயினும், பலவகை. யாய் வளர்ந்து நிற்றல் போல், புதிதாகத் தோன்றிய நாவ லும் பலவகையாய்ப் பெருகியுள்ள து. வடிவாலும் பலவகை, பொருளாலும் பலவகை எனத் தக்கவாறு நாவல் வளர்ச்சி பெற்றுள்ளது. நிகழ்ச்சிகள் மிக்க நாவல் (novel of action), பண்பு நலன் விளங்கும் நாவல் (novel of character), விளக்கமும் வருணனை யும் மிக்க நாவல் (picturesque novel), நாடகப் போக்கின தாகிய நாவல் (āramatic novel) என நாவல் நான்கு வகைப் படும். துப்பறிவன திடுக்கிடும் நிகழ்ச்சிகளும் வீர தீரச் செயல்களும் மாயச் செயல்களும், துப்பறியும் செய்திகளும் மிகுந்த நாவல்கள் முதல் வகையைச் சார்ந்தன ஆகும். ஒரு செயல், அதைத் தொடர்ந்த விளைவுகள், அடுத்து நிகழும் சில நிகழ்ச்சிகள், குழப்பங்கள் என இவ்வாறே தொடர்புற்று அமைந்து இவ் வகை நாவல் கற்பவர்க்குச் சுவை மிகப் பயக்கும். சிந்தனை யாற்றல் குறைந்தவர்கள் இவ் வகையையே மிகுதியாக விரும்புவர். இவ்வகையே எல்லா நாடுகளிலும் பெரிய அளவில் பரவி நிற்பதாகும். கொலைகளும் கொள்ளைகளும் மலிந்த கதைகளை இவை கொண்டிருக்கும். கதைக் கருவோ, மாந்தரின் பண்புகளோ இவற்றில் சிறந்து நிற்கத் தேவை