பக்கம்:இலக்கிய மரபு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 123 யில்லை. முடிவில் தலைமை மாந்தர் எவ்வாறோ உயிர் பிழைத்து வெற்றி பெறுவதாகக் கதை அமைந்தால் போதும். திடுக்கீடும் ஆபத்தான நெருக்கடியும் உணர்ச்சி யைத் தூண்டுவன ஆதலால், அவற்றால் இந் நாவலுக்குக் கவர்ச்சி மிகுதி எனலாம். திடுக்கிடும் நிகழ்ச்சிகள் நிறைந்த கதைகள், படிப்ப வர்க்கு உடனே சுவை பயந்து கவர்ச்சி ஊட்டலாம். துப்பறி யும் கதைகளும் அவ்வாறே படிப்பவரைக் கவரலாம். நிகழ்ச்சி களால் மட்டும் கவர்ச்சி ஊட்டும் இத்தகைய கதைகளில், ஐயப்பாடுகளையும் ஆவலையும் மனத்தில் ஏற்படுத்தி தொடர்ந்து படிக்குமாறு தூண்டும் ஆற்றல் உண்டு. அத னால், அடுத்தது என்ன என்று அறியும் வேட்கை மட்டுமே உள்ளது. அந்த வேட்கை தணிந்தபின், கதையில் இருந்த ஆர்வம் எல்லாம் தீர்ந்துவிடுகிறது. கதையைப்பற்றி மேலும் சிந்திக்கவும் தோன்றுவதில்லை ; மறுமுறை கதையைப் படிக்கவும் ஆசை எழுவதில்லை. அதனால்தான் அத்தகைய கதைகளை யாரும் இரண்டாம் முறையும் படிப்பதில்லை. என்ன நடக்கும் என்பது தெரிந்துவிட்டபடியால், முதல் முறை இருந்த ஆர்வம் இருப்பதில்லை. ஆயின், கதை மாந்தரின் பண்பு பற்றிய சிறப்பு அமைந்த கதையில், அந்த மாந்தரோடு கற்பவரின் உள்ளத்திற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிடுவதால், கற்பவர் கதைமாந்தரை எளிதில் மறப்பதில்லை ; கதையையும் மறப்பதில்லை. அவர்களோடு கற்பனையுலகில் பழக வேண்டும் என்ற ஆவல் என்றும் இருப்பதால், அந்தக் கதைகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளது. பண்பு பற்றியன பண்புநலன் பற்றிய நாவலில் நிகழ்ச்சிகள் திடுக்கிடக்க கூடியனவாக அமையத் தேவை இல்லை. சிறு நிகழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/127&oldid=1681943" இலிருந்து மீள்விக்கப்பட்டது