________________
128 இலக்கிய மரபு தொடர்ந்து செல்கிறது ; அதனால் கற்பவர் ஒரே மூச்சில் கற்றல் எளிதாகிறது. நாடகம் போல் பலவாய்ச் சிதறிய வாழ்க்கை இல்லாமல், ஒருவருடைய இன்ப துன்ப அனு பவத்தை அவரே கூறக் கேட்பது போல் அமைந்து சுவை மிகுதியாகிறது.ஆனால் இந்தமுறையிலும் குறைகள் உண்டு. முதல் குறை : கதை சொல்லும் அந்த ஒருவரைப் பற்றி மிகுதியாக அறிய இடமில்லாமற் போவது உண்டு; அந்த ஒருவர் பிறரைப் பற்றி விளக்குமளவுக்குத் தம்மைப் பற்றி விளக்க இடமில்லை. ஆதலால் இந்தக் குறை ஏற்படும். இரண்டாவது: பிறரைப் பற்றி ஆசிரியர் பற்று இல்லாமல் சொல்லுமளவிற்குப் பொதுவாக அந்தக் கதைமாந்தர் சொல்ல முடியாது; அவர் தம் அனுபவத்திற்குத் தொடர் யான அளவிற்கு மட்டுமே பிறரைப் பற்றிச் சொல்ல முடியும். அதனால் காட்சிகளைப் பற்றிய வருணனைகளும் குறைந் திடும். கற்பனையான நிகழ்ச்சிகளையும் உண்மையாக நடந் தவை போலவே, நம்பத் தக்க முறையில் எடுத்துரைக்க வேண்டிய திறமை நாவலாசிரியர்க்கு வேண்டும். ஆசிரியர் எடுத்துரைக்கும் கதையைவிட, கதைமாந்தர் ஒருவர் முழுதும் எடுத்துரைப்பதாக அமைக்கும் கதையில் இந்தத் திறமை மிகுதியாக வேண்டும். நாவலின் அமைப்பில் மற்றொருவகையும் உண்டு. அது கற்பனை மாந்தர் ஒருவர் கூறுவதாக அமையாமல், இருவர் மூவரோ நால்வர் ஐவரோ மாறி மாறி வந்து தம் கருத்துக் களையும் உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் எடுத் துரைத்துச் செல்வதாக அமைவது. ஏறக்குறைய அது நாடகப் போக்கில் அமைவது எனலாம். ஆனால் நாடகம் போல், பலர் அல்லது சிலர் சேர்ந்து பேசும் முறை இதில் இல்லை. ஒவ்வொருவரும் தனித் தனியே நாடக அரங்கிற்கு