பக்கம்:இலக்கிய மரபு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  1. 30

இலக்கிய மரபு சிக்கல் மிகுந்ததாகும். வேறு சிறந்த பயன் இருந்தால் தவிர, பெரும்பாலோர் அந்த முறையைக் கையாள்வது இல்லை. வரலாற்று நாவல் வரலாற்று நாவலில், எந்தக் காலத்து வரலாறு பின்னணியாக அமைகிறதோ, அந்தக் காலத்துச் சூழ்நிலை களும் பழக்க வழக்கங்களும் உடை முதலியனவும் தவிர வேறு எவையும் தரப்படலாகாது. இக்காலத்துக்கு உரிய வற்றையோ வேறு காலத்துக்கு உரியவற்றையோ, அந்த நாவலில் அமைப்பது பெரும் பிழையாகும். ஆகவே, வரலாற்று நாவலில், கால வரையறை மிக மிக இன்றியமை யாததாகும். கதைக் கரு வேண்டும்; கதைக் கரு, இயற்கையாக அமைதல் ஆசிரியர் பாடுபட்டு வலிந்து அமைப்பதாக இருத்தல் ஆகாது. நடக்கக் கூடியதே என்று நம்பத் தக்க வகையில் இயல்பாக அமையும் கருவே கதைக்குக் கவர்ச்சி தரு வதாகும். கதைக்கு எதுவும் கருவாக (plot) அமைய முடியும். ஆயின், அக் கருவிற்கு உணர்ச்சியூட்டிச் சிறப்பித்தல் கதையாசிரியரின் திறனே ஆகும். உணர்ச்சி யனுபவம் மிக்க ஆசிரியர் உணர்ந்து தேர்ந்த கதைக் கருவே சிறப் யுடையதாக விளங்கும். இச் சிறப்பு இல்லையானால் எவ்வளவு சிறந்த வாழ்க்கைப் பகுதி கதையில் அமைந் தாலும் பயன் விளையாது. கதைக் கரு என்பது என்ன? வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி, ஒரு சிக்கலான விளைவு ; அது வரலாற்றிலிருந்து கண்டமைத்ததாக இருக் கலாம் ; அல்லது நாட்டுக் கதைகளிலிருந்து, புராணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/134&oldid=1681986" இலிருந்து மீள்விக்கப்பட்டது