பக்கம்:இலக்கிய மரபு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 இலக்கிய மரபு தோற்றம் காவியங்களும் நாடகங்களும் பண்டுதொட்டு இருந்து வர, நாவல்கள் ஏன் தோன்றின என் ன்று காணல் வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பா அடைந்த பெரிய மாறுதலே அதற்குக் காரணம் ஆகும். நடுத்தர வகுப்பாரில் பலரும் படிக்கத் தொடங்கிய காலம் அது. அவர்கள் அவ்வாறு படிப்பதற்கு ஏற்ற முறையில் ஆயிரக் கணக்கில் நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு ஏற்ற அச்சுக் கருவிகள் பெருகிய காலமும் அதுவே. காவியங் கள் முதலியவற்றை மெல்ல மெல்லப் படித்துச் சுவைக்கக் கூடிய வாய்ப்புக் குறைந்து, வேகமாகவும் எளிமையாகவும் சில நூல்களைப் படித்து இன்புற வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட காலமும் அதுவே. இத்தனை மாறுதலுக்கும் தேவைக்கும் ஏற்றவாறு அமைந்தவை கதைப் புத்தகங் களே ஆகையால், புலவர் சிலர் கதை எழுதும் முயற்சியில் முனைந்தனர். அவர்களின் படைப்புக்களுக்கு நல்ல வா வேற்பும் பயனும் இருக்கக் கண்டதும், காவியங்களும் நாட கங்களும் படைக்க வல்லவர்களும் இத் துறையில் திரும்பி னர். அதன் பிறகு காவியங்கள் பல தோன்றாமை போலவே, நாடகங்கள் பல தோன்றாமைக்கும் காரணம், அவற்றின் இடத்தை நாவல் என்னும் புதிய இலக்கிய வகை கைப்பற் றியதே என்பர்.* அச்சுப் பொறியின் உதவி மக்களுக்குக் கிடைக்குமுன், பல புத்தகங்கள் இல்லாமல் சில படிகளே இருந்துவந்த காலத்தில்,உள்ள சிலவற்றை ஒருவர் படித்துக் கூற,மற்ற வர்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்து கேட்டறியும் வழக்கம் பெருகியிருந்தது. ஏடு படிப்பவர் என்று சிலர் இருந்து *The place of drama has been in a great measure usurped by the modern novel. -J. C. Shairp, Aspects of Poetry, p. 61.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/140&oldid=1681971" இலிருந்து மீள்விக்கப்பட்டது