பக்கம்:இலக்கிய மரபு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 137 வந்த காலம் அது. அந்தக் காலத்தில் பழைய நிகழ்ச்சி கள் எல்லாவற்றையும் தொடர்ந்து எட்டில் எழுதிவைத்து அவற்றைப் படித்துவந்தார்கள். அவை வரலாறு போல் அமைந்தவை. ஆனால் காலப் போக்கில் எடு படிப்பவர்க் கும் ஏடு எழுதுவோர்க்கும் தோன்றிய கற்பனைக் கருத்துக் கள் எல்லாம் அவற்றில் மெல்ல மெல்லப் புகுந்தன. அ வாறு பிறவற்றை நூலில் சேர்ப்பது குற்றம் என்று அக் காலத்தவர் கருதவில்லை. அது ஒருவகைத் தொண்டா கவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொல்காப்பி பியம் முதலான இலக்கண நூல்களையும் திருக்குறள் முத லான நீதி நூல்களையும் அவ்வாறு ஒருவர் படிக்க, பலர் கேட்டு அறிய முடியவில்லை. நுட்பமான கருத்துக்கள் உடைய அவற்றை ஒரு சிலர் தனித் தனியே இருந்து படித்துப் பயன்பெற்றனர். கதைப் போக்காக உள்ள வர லாறுகளை மட்டுமே அவ்வாறு ஒருவர் படிக்கப் பலர் கேட்டு மகிழ முடியும். அவற்றில் மட்டுமே ஏடு எழுதுவோரின் கற்பனையும் ஏடு படிப்பவரின் கற்பனையும் இடம் பெற்றன. அதனால் தான் கம்ப ராமாயணம் முதலான காவியங்களில் இடைச் செருகல்கள் மிகுதியாக உள்ளன. கதை அவ்வாறு வாலாறு படித்து மகிழ்வித்தவர், வரலாற் றிற்கும் கதைக்கும் வேறுபாடு செய்யவில்லை. வரலாறு போலவே வழங்கியது: கற்பனைகளுக்கு நிரம்ப இடம் தந்தது.: நாவல் என்ற இலக்கிய வகை தனியே வளரத் தொடங்கிய பிறகே ஐரோப்பாவிலும், கதை வேறாகவும் வரலாறு வேறாகவும் தெளிவு ஏற்பட்டது : அதன் பிறகே, கதை கற்பனை நிறைந்தது என்றும், வரலாறு உண்மை மட்டுமே கூறுவது என்றும் SUGU THIG0/1) ஏற்பட்டது. அதனால்தான், நானூறு ஆண்டுகட்குமுன் வாழ்ந்த ஆங் கில நாட்டுப் புலவர் பேக்கன் என்பவர், கதையிலக்கியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/141&oldid=1681988" இலிருந்து மீள்விக்கப்பட்டது