________________
நாவல் 143 திங்கள் தோறும் வெளியாகும் அந்த இதழ்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குக் கவர்ச்சியாக இருப்பதற் காக, ஆசிரியர்களின் கதைகளைக் கேட்டு, அவற்றைத் தொடர்ச்சியாக அந்த இதழ்களில் வெளியிடும் வழக்கம் ஐரோப்பாவில் சென்ற நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது. அதனால் அவற்றை எழுதுவோர்க்கு ஊக்கம் மிகுந்தது. உடனுக்குடன் அந்தக் கதைகளைப் படிப்பவரின் தொகை பெருகிய காரணத்தால், நாவலாசிரியர்களுக்கு மகிழ்ச்சியும் பிறந்து, ஊக்கம் இரட்டிக்கலாயிற்று. அந்தத் துறையால் வருவாயும் உடனே கிடைத்தமையால், எழுதுவோரின் தொகையும் பெருகிற்று. ஆனால், ஒரு குறை தோன்றியது. உள்ளத்தில் புத்துணர்ச்சி உந்த அதனால் கதை எழுதும் நிலை மங்கி, எழுதி முடித்து இந்த வாரத்தில் அனுப்பிவிட வேண்டுமே என்ற கட்டாயத்தால் கதை வளரும் நிலை ஏற் பட்டது. அதனால் பலருடைய படைப்புக்கள் போலிகளாக அமைந்தன. சிறப்புள்ள இலக்கியம் பிறப்பது அரி தாயிற்று. ஆசிரியர் புகாமை ஆசிரியர் கதைமாந்தரைப் பேசவும் எண்ணவும் செய்ய வேண்டுமே தவிர, இடையே தாம் வந்து பேசுதலும். கூடாது; எண்ணுதலும் கூடாது. ஏதேனும் விளக்கம் தர வேண்டுமானாலும் கருத்தைத் தெரிவிக்க வேண்டு மானாலும், கதைமாந்தர் வாயிலாகவே அவற்றைத் தர வேண்டுமே அல்லாமல், தாம் புகுந்து தெரிவித்தல் கூடாது. கதைமாந்தரைப் பற்றியே விளக்கம் தர வேண்டுமாயினும், அவர்களுள் ஒருவர் வாயிலாக மற்றொருவரை விளக்கி விடலாமே அல்லாமல், தாமே வந்து விளக்குதல் கூடாது. சிறந்த ஓவியக் கலைஞர், தம் ஓவியத்தின் அருகே நின்று விளக்கம் கூறப் புகுதல் எவ்வாறு பொருந்தாதோ