பக்கம்:இலக்கிய மரபு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இலக்கிய மரபு அவ்வாறு புலவர் தம் கதை அல்லது காவியத்தின் இடையே புகுந்து விளக்குதலும் பொருந்தாது. அன்றியும், கதைமாந்தரைப் பற்றி ஆசிரியர் விளக்கிக் கூறுவதால் கற்பவரின் நெஞ்சில் போதிய உணர்ச்சி ஏற் படாது. இனிப்பு இனிப்பு என்று அச் சுவையை விளக்கிக் கொண் டிருப்பதைவிட, தேனையோ கரும்பையோ கொண்டு வந்து தருதல் சிறப்பான செயலாதல் போல், கதைமாந்த ரைப் பற்றி விளக்கம் தருதலைவிட, கதைமாந்தரையே கற்பனையில் படைத்துக் கற்பவரின் மனக்கண் காணுமாறு செய்தல் கலைச் சிறப்புடையதாகும். நாவலில் பற்பல நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் கருத் துக்களையும் ஆசிரியர் இடையிடையே தரலாம்; இடங்களை யும் மாந்தரையும் வருணிக்கலாம்; வேறு பல விளக்கங் களும் தரலாம். ஆயின் இவை யாவும் கதைக்கு உறுப்புக் களாக வர வேண்டும்; கதையில் இவை யாவும் கலந்து போக வேண்டுமே அல்லாமல், ஒட்டியும் ஒட்டாமல் தனித்து நிற்றலாகாது. ஏனெனில், இத்தகைய இலக்கியத்தில் கதையே இன்றியமையாதது. ஆசிரியரின் உணர்ச்சியைப் புலப்படுத்த ஒலிநயம் முதலியன இல்லாத காரணத்தால், கதையின் வாயிலாகவே அவர் தம் உணர்ச்சிகளை வெளிப் படுத்தி, அந்த உணர்ச்சிகளைக் கற்பவரின் உள்ளத்தில் எழுப்ப முடியும்.* சில கலைஞர் ஒவ்வொருவர்க்கும் வாழ்க்கையில் கொள்கைகளும் குறிக்கோள்களும் உண்டு. ஆகையால், அந்தக் கொள்கைகளும் குறிக்கோள்களும் எவ்வாறேனும்

  • The story is necessary to the novel. It is the means by which the

novelist completely projects and embodies his own emotional attitude to life. It is the comprehensible symbol which is the condition of lucidity. -J. M. Murry, Discoveries, p. 148.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/148&oldid=1681906" இலிருந்து மீள்விக்கப்பட்டது